இலங்கையில் கொரோனா வைரஸிற்கு இலக்கான ஒரு வயது குழந்தை

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்களில் ஒரு வயதும் 5 மாதங்களுமான குழந்தையும் உள்ளடங்குவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.இந்த குழந்தையின் தாய்க்குத் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் தந்தைக்கும் கொரோனா தொற்றியுள்ளதா என சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவர்கள் இத்தாலியில் இருந்து வருகைத்தந்தவர்களாகும்.வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளவர்கள் அங்கொட தொற்றுநோய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று இரவு வரையில் 43ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 15ஆக அதிகரித்துள்ளது.தற்போது நோய் தொற்று உறுதியாகியுள்ள அனைவரும் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளனர்.

முகநூலில் நாம்