இலங்கையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ரொபோ இயந்திரங்கள் !

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளிகள் இருவருக்கு சிகிச்சையளிக்க ரொபோ இயந்திரங்களை பயன்படுத்தவுள்ளதாக ஹோமகம வைத்தியசாலை அறிவித்துள்ளது.

உள்ளூர் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த ரொபோ இயந்திரங்கள் மூலம் மனித வலு வெற்றிடங்களை நிரப்பமுடியும் என்று நம்பிக்கையுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

வைத்தியர்களுக்கு தொலைத்தொடர்பு மற்றும் ஏனைய உபவிடயங்களில் உதவுவதற்காகவே இந்த ரொபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

இந்த ரொபோக்கள் நாளாந்த பணிகளை சரியாக செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

நோயாளிகள் தங்கியிருக்கும் அறைகளுக்கு செல்லவும் நோயாளிகளின் நிலைமை தொடர்பாக தகவல்கள் மற்றும் மருந்துகளை காவிச்செல்லவும் இதனை பயன்படுத்தமுடியும்.

இந்த ரொபோக்கள் இலங்கையின் நிறுவனம் ஒன்றினால் 10லட்சம் ரூபா செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனைக்கொண்டு ஏனைய வைத்தியசாலைகளிலும் அன்றாட பணிகளை செய்யக்கூடியதாக இருக்கும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது

முகநூலில் நாம்