
நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 669 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 27,228 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரவு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட அனைத்து நோயாளர்களும் பேலியாகொட – மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
அதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொட கொவிட் கொத்தணியில் சிக்கிய நோயாளர்களது எண்ணிக்கை தற்போது 23,674 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 20,090 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ள நிலையில் 7,008 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 475 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.
இதுதவிர கொவிட் 19 தொற்றின் காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட்19 தொற்றுக்குள்ளாகி உயிரழந்த நோயாளர்களின் எண்ணிக்கையும் 137 ஆக உயர்வடைந்துள்ளது.
01. பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 91 வயதான ஆண் நபர். 2020 டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார் மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானமையினால் ஏற்பட்ட மாரடைப்பாகும்.
02. சிறைச்சாலை கைதியான 53 வயது ஆண் நபர். 2020 டிசம்பர் மாதம் 01ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா நிலை ஆகும்.
03. தெமட்டகொடை பிரதேத்தைச் சேர்ந்த 56 வயதான பெண். தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற வேளையில் 2020 டிசம்பர் மாதம் 04ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
04. பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதான பெண். 2020 நவம்பர் மாதம் 28 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுடன் ஏற்பட்ட கடுமையான நுரையீரல் நோய் மற்றும் இருதய நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
05. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதான பெண் 2020 டிசம்பர் 04ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுடன் நிமோனியா நிலை ஆகும்.
06. வெலிக்கடை சிறைச்சாலை கைதியான 66 வயது ஆண் நபர். சிறைச்சாலை வைத்தியசாலையில் 2020 டிசம்பர் மாதம் 02ஆம் திகதி உயிரிழந்துள்ளார் மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுடன் நிமோனியா நிலை ஆகும்.
07. வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான பெண். தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் சிகிச்சைப் பெற்ற வந்த நிலையில் 2020 டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு அதி உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் 19 நிமோனியா நிலைமையுடன் உறுப்புகள் செயலிழந்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.