இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு! விமான சேவைகள் பல மாற்றம்

COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் வருவதற்கு தடை விதித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான் சேவை தெரிவித்துள்ளது.

அதற்கமைய கட்டார் நாட்டினால் இலங்கை உட்பட 13 நாடுகளின் சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டிற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டார் நாட்டின் பொது தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கமைய, இலங்கை, பங்களாதேஷ், எகிப்த்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது கட்டார் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு என்பதனால், விமான சேவை என்ற ரீதியில் ஸ்ரீலங்கன் விமான சேவை அந்த உத்தரவை மதித்து செயற்படுகின்றது.

இதனால் தங்கள் பெறுமதியான வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தொடர்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை குவைத், சவதி அரேபியா ஆகிய பிராந்தியங்களுக்குமான சேவைகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்