இலங்கையிலிருந்து ஜோர்டான் ஊடாக பல்வேறு நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காக சட்டவிரோதமான முறையில் மோசடி

இலங்கையில் இருந்து ஜோர்டான் ஊடாக பல்வேறு நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் இலங்கையர்களின் மற்றுமொரு மோசடி தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

பணியகம் தனது விமான நிலையப் பிரிவு இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதுடன் விழிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆட் கடத்தல் சம்பவங்கள் சமூக ஊடகங்கள் ஊடாக அடிக்கடி பதிவாகி வருவதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும், ஆட்கடத்தல்காரர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதற்கும் ஆபத்துக்களை எடுப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை பணியகம் வலியுறுத்தியதுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வேலைவாய்ப்புக்காகப் புறப்படுமுன் பதிவுசெய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.

1989 அல்லது 0112 864241 என்ற தொலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு 24 மணித்தியால தகவல் நிலையத்துடன் இவ்வாறான கடத்தல்காரர்களின் தகவல்களை வழங்குமாறு பணியகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்