இலங்கையின் வீரர்கள் தாங்கள் யார் என்பதை காட்டவேண்டும் – பங்களாதேஸ் பயிற்றுவிப்பாளரின் கருத்துக்கு மகேல பதிலடி

பங்களாதேஸ் அணிக்கு எதிரான இன்றைய  டி20 போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர்களும் துடுப்பாட்ட வீரர்களும் தாங்கள் யார் என்பதை காண்பிக்கவேண்டும் என மகேலஜெயவர்த்தன  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பங்களாதேஸ் பயிற்றுவிப்பாளர் காலிட்மஹ்மூட் டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்திற்கு பதிலளித்து மஹேல ஜெயவர்த்தன டுவிட்டரில் இதனை பதிவுசெய்துள்ளார்.

பங்களாதேசிடம் இரண்டு உலகதரம் மிக்க பந்துவீச்சாளர்களே உள்ளனர் என இலங்கை அணியின் தலைவர் தசுன்சானக தெரிவித்திருந்த கருத்திற்கு பதிலளித்திருந்து பங்களாதேஸ் பயிற்றுவிப்பாளர் இலங்கை அணியில் உலக தரம்வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லை என தெரிவித்திருந்தார்.

தசுன் சானக ஏன் அவ்வாறு தெரிவித்தார் என்பது தெரியவில்லை சகீப் அல் ஹசன் மற்றும் முஸ்தபிசூரை தவிரவேறு உலகதரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் பங்களாதேசிடம் இல்லை என அவர் தெரிவித்ததை செவிமடுத்தேன் இலங்கை அணியில் ஒரு சர்வதேச தரம்மிக்க பந்துவீச்சாளரை காணமுடியவில்லை என பங்களாதேஸ் பயிற்றுவிப்பாளர் தெரிவித்திருந்தார்.

பங்களாதேசிடம் ஆகக்குறைந்தது இரண்டு உலகதரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர் அவர்களின் தரத்தில் கூட இலங்கை அணியில் பந்துவீச்சாளர்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மகேலஜெயவர்த்தன இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களும் துடுப்பாட்;டவீரர்களும் தாங்கள் யார் என்பதை களத்தில் காட்டவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்