இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார்

இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி
ஜோசப்) சுகவீனம் காரணமாக இன்று காலமானார். கடந்த சில மாதங்களாக
சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார்.

பெப்ரவரி 16, 1934 ஆண்டு பிறந்த அவர், ஈழத்தின் சிறுகதையாளர்,
நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் ஆவார். இலங்கையின் மலையகப்
படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம்
மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். அத்துடன் இலங்கை தமிழ் ஊடகங்களால்
பல்வேறு  ஆக்கங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அதேபோல் இதுவரை ஆறு
நாவல்களையும், மூன்று சிறுகதை தொகுதிகளையும் வெளியிட்டுள்ள தெளிவத்தை
ஜோசப், இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய காற்று திரைப்படத்திற்கும்
தொலைக்காட்சி நாடகமொன்றுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்