இலங்கையின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் காலியில் திறப்பு!

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் அண்மையில் காலியில் திறக்கப்பட்டது.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

கடற்படை தளபதி முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

கடற்படையின் பூரண பங்களிப்புடன், காலி கடற்பரப்பில் நீருக்கடியிலான அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, கடற்படைத் தளபதியின் பூரண கண்காணிப்பின் கீழ் இந்த அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டது.

சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்தி, நீருக்கடியிலான அருங்காட்சியம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

காலி துறைமுகத்தில் 50 அடி ஆழத்தில் இந்த அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மேலும் 2 அருங்காட்சியகங்களை திருகோணமலை மற்றும் தங்காலையில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்