
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பில்
எதிர்வரும் புதன்கிழமை பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விசேட விவாதம்
நடைபெறவுள்ளது.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய
சூழ்நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைவரம்
தொடர்பில் எதிர்வரும் 9ஆம் திகதி மக்களவையில் விவாதிப்பதற்கு
பிரித்தானியப் பாராளுமன்ற பின்வரிசை அலுவல்கள் தொடர்பான குழு
தீர்மானித்துள்ளது.
பிரித்தானியப் பாராளுமன்ற பின்வரிசை அலுவல்கள் தொடர்பான குழுவானது தமது
விருப்பத்தின் அடிப்படையில் விவாதத்தை முன்வைப்பதற்கான வாய்ப்பை
பாராளுமன்ற பின்வரிசை உறுப்பினர்களுக்கு வழங்கவுள்ளது.
அந்தவகையிலேயே தற்போது இலங்கையின் நிலைவரம் குறித்து விவாதிப்பதற்குத்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.