இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமானதாக மாறுகின்றது – உலக வங்கி

இலங்கையின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடைகின்றது என உலக வங்கி எச்சரித்துள்ளது.

கொவிட் பெருந்தொற்றின் நீடிக்கும் வடுக்களிற்கு மத்தியில் தாங்கமுடியாத
கடன் மற்றும் உட்பட பல காரணங்களால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி
மோசமடைகின்றது என உலக வங்கி எச்சரித்துள்ளது.

இலங்கை பொருளாதார ஸ்திரதன்மையை அடைவதற்கு கடன்மறுசீரமைப்பும் ஆழமான
சீர்திருத்த திட்டங்களும் அவசியமானவை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இலங்கை
ஆழமான சீர்திருத்தங்களை துரிதப்படுத்துகின்ற இந்த தருணத்தில் நலிவடைந்த
நிலையில் உள்ளவர்களை பாதுகாப்பது மிகவும் அவசியம் என உலக வங்கியின்
இலங்கை மற்றும் மாலைதீவிற்கான இயக்குநர் பாரிஸ் ஹடாட் ஜெர்வோஸ் புதிய
அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்