இலங்கையின் புதிய அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதூன வெட்கக்கேடான ஈவிரக்கமற்ற தாக்குதலை நிறுத்த சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள்

இலங்கையின் புதிய அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான வெட்கக்கேடான ஈவிரக்கமற்ற தாக்குதலை நிறுத்தவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பில் உள்ள பகுதிகளில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேறுவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னதாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள அமைதியான ஆர்ப்பாட்ட பகுதியான ஆர்ப்பாட்டக்காரர்களின் கோட்டா கோ கமவின் மீது அதிகாலைக்கு முன்பாக இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டதை தொடர்ந்தே சர்வதேச மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவிற்கு பின்னர் இராணுவத்தினர் பொலிஸார் விசேட படையினர் இணைந்து முன்னெடுத்த பாரிய நடவடிக்கை மூலம் கொழும்பில்  ஏற்படுத்தப்பட்டிருந்த அமைதியான ஆர்ப்பாட்ட பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர் அந்த பகுதி முடக்கப்பட்டது ஊடகங்கள் சட்டத்தரணிகள் செயற்பாட்டாளர்கள் அந்த பகுதிக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கிடைத்த தகவல்களின் படி ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்தனர் 9 பேர் கைதுசெய்யப்பட்டனர். காலிமுகத்திடலில் உள்ள கோடாகோகம என்ற ஆர்ப்பாட்டத்திற்கான சின்னமான பகுதியில் விடியலிற்கு முன்னதாக இடம்பெற்ற தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்,இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்கொண்டுள்ள மோசமான நிலை குறித்து உலகின்கவனத்தை ஈர்த்த முக்கிய ஆர்ப்பாட்ட பகுதியாக இது காணப்பட்டது.

ஆட்சிக்கு வந்து சில மணிநேரங்களில் புதிய அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது வெட்கக்கேடானது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்.அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரதிசெயலாள நாயகம் கைல்வோர்ட் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது அளவுக்கதிகமான பலம்,அச்சுறுத்தல் சட்டவிரோதமாக தடுத்துவைத்தல் ஆகிய அதிருப்தி மற்றும் அமைதியான    ஒன்றுகூடலிற்கு பதிலளிப்பதற்கு இலங்கை அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கையளிக்கும் வடிவமாக காணப்படுகின்றது.

இந்த ஒடுக்குமுறை செயற்பாடுகள் மக்களின் கருத்து வெளிப்பாடு உட்பட சர்வதேச மனித சட்டங்களின் கீழ் இலங்கைக்கு உள்ள கடப்பாடுகளை நிறைவேற்றவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்