இலங்கையின் கடன் விவகாரம்- ஜப்பானின் நிதி- வெளிவிவகார அமைச்சர்கள் தெரிவித்துள்ளது என்ன?

இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பில் அந்த நாட்டிற்கு கடன்வழங்கிய நாடுகள் அனைத்தும் ஒன்றுகூடி ஆராய்வது அவசியம் என ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இந்த விடயம் குறித்து ஜப்பான் ஏனைய நாடுகளுடன்  ஒருங்கிணைந்து செயற்படும  எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளுடன் ஜப்பான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வேண்டும் என ரொய்ட்டருக்கு வழங்கிய பேட்டியில் இலங்கை ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே இந்த விடயம் குறித்து ஜப்பான் ஏனைய நாடுகளை ஒருங்கிணைந்து செயற்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் சந்திப்பு தொடர்பில் இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யொகிமாசா ஹயாசி தெரிவித்துள்ளார்.

நாங்கள் இலங்கையுடன் பல விதமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் ஆனால் இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகளின் சந்திப்பு தொடர்பில் எந்த ஏற்பாடும் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்