இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சீனா பச்சைக்கொடி

Three dimensional map of China in Chinese flag colors.

சாம்பியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு குறித்த
சீனாவுடனான பேச்சு பயனுள்ள வகையில் நிறைவடைந்துள்ளதாக ஐ.எம்.எப்.
தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கான விரைவான கடன் மறுசீரமைப்பு குறித்து விடுக்கப்பட்ட
கோரிக்கைக்கு சீனா சாதகமாக பதிலளித்துள்ளது என அதன் தலைவர் கிறிஸ்டலினா
ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவருக்கும் சீனப் பிரதமருக்கும் இடையிலான
பேச்சின் பின்னர் இந்த நம்பிக்கையான பதில் கிடைத்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்