
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இருதரப்புபேச்சுவார்த்தைகளுக்காக இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.இருப்பினும், இந்த விஜயத்திற்கான இறுதி திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர், ஜெய்சங்கர்இலங்கைக்கு பயணம் செய்வது இதுவே முதல்முறையாகும்.இந்தியா ஏற்கனவே 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை கடன்கள்,கொடுப்பனவுகளை ஒத்திவைத்தல் மற்றும் நாணய மாற்று ஏற்பாடுகள் ஆகியவற்றின்அடிப்படையில் இலங்கைக்கு வழங்கியுள்ளது.இந்தநிலையில் புதுவருடத்தில் இந்தியாவிலிருந்து வரும் முதல் உயர்மட்டவருகையாக ஜெய்சங்கரின் வருகை அமைந்துள்ளது.