இலங்கைக்கு   வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு mobile app

இலங்கை க்கு   வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிப்பதற்காக புதிய செயலி (mobile app) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு அவர்களைக் கண்காணிப்பதற்கான குறித்த புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதன்படி, 25 மாவட்டங்களில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் குறித்த தரவுகளை சேகரித்துக் கொள்வதற்கு குறித்த செயலி பயனுள்ளதாக அமையும்.

ஸ்ரீலங்காவிலுள்ள சர்வதேச விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் கொரோனா தொற்றுக் குறித்து எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுக்கத் தயாராக உள்ளது.

கொவிட்-19 சான்றிதழை வழங்க ஒரு தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளதுடன், வீட்டு பராமரிப்பு, விருந்துகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்து சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு விடுதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஸ்ரீலங்காவிற்கு வருகைதரும் பயணிகள் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,

இலங்கையின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் செயல்முறைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும், சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின்படி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அவர்கள் வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகளை தம்முடன் எடுத்து வரவேண்டும் என்பதுடன், விமான நிலையத்தில் மற்றொரு பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து சுற்றுலா பயணிகளும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட விடுதிகளில் சுகாதார அமைச்சினது அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்