இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47 ஆயிரத்து 353 சுற்றுலாப்
பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த
விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த
சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள்
ரஷ்யாவிலிருந்து வந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ரஷ்யாவிலிருந்து 12 ஆயிரத்து 64 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு
வருகை தந்துள்ளனர்.

மேலும், இந்தியாவில் இருந்து 5 ஆயிரத்து 838 பேரும், ஜேர்மனியில் இருந்து
3 ஆயிரத்து 945 பேரும், பிரித்தானியாவிலிருந்து 3 ஆயிரத்து 862 பேரும்,
பிரான்சில் இருந்து 2 ஆயிரத்து 241 பேரும் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், இம்மாதம் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் சுற்றுலாப் பயணிகள்
இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகார
சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்