இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கபடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்
சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடத்தல் நோக்கத்துடன், வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரம்பு மீறி தங்க
நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை
எடுக்கபடவுள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாட்டிற்கு தங்கம் கடத்தப்படுவதால்
மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரி வருமான
இழப்பு ஏற்படுகின்றது.

இந்த கடத்தல்காரர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு
எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும். ஆனால், சாதாரண
பயணிகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது’ என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்