இலங்கைக்கு செல்லக்கூடிய இந்திய குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க இந்தியா விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையில் வசிக்க கூடிய மற்றும் இலங்கைக்கு செல்லக்கூடிய இந்திய குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி, அந்நிய செலாவணி தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு என வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. 

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளும் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி வாராந்திர நேற்று (25) ஊடகவியாளர்களிடம் பேசும்போது, 

இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் அல்லது இலங்கை செல்ல நினைக்கும் இந்தியர்களுக்கான பொதுவான வழிகாட்டி நெறிமுறைகளாவது, இந்தியாவுக்கு வெளியே இந்தியர்களுடன் தொடர்புடைய விரும்பத்தகாத சம்பவம் எதுவும் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதே நம்முடைய முயற்சி. 

ஆகவே, இலங்கையில் இருக்கும்போது, அனைத்து இந்தியர்களும் கவனத்துடன் மற்றும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அவர்களை ஊக்கப்படுத்துகிறோம். 

இலங்கை பயணத்திற்கு முன்பு நாணயங்களை மாற்றுவது மற்றும் எரிபொருள் சூழ்நிலை உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து காரணிகள் பற்றியும் அவர்கள் நன்றாக ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறைகளை நாங்கள் சில காலம் வரை செய்து வருகிறோம். ஏனெனில் இலங்கைக்கான மிக பெரிய சுற்றுலாவாசிகள் வளங்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்