
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உதவ முன்வருவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் பக்க பதிவொன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்தள்ளார்.
அத்துடன், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவின் அடிப்படையிலேயே இவ்வாறு அமெரிக்கா உதவ முன்வந்துள்ளதாகவும் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.