இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தகத் தூதுவர் நாட்டுக்கு விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தகத் தூதுவர் Davies of Abersoch மூன்றுநாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்குவருகைத்தந்துள்ளார்.அவர் நேற்று (புதன்கிழமை) நாட்டை வந்தடைந்ததாக பிரித்தானியஉயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதாரபங்காளித்துவத்தின் பரஸ்பர வளர்ச்சியை அடைவதற்கும் இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் திட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகளைமேம்படுத்துவதும் இந்த விஜயத்தின் நோக்கமாகும் என பிரித்தானியஉயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.அதன்படி, இந்த விஜயத்தின்போது அவர், நாட்டில் வர்த்தக வாய்ப்புகளைவிரிவுபடுத்தும் நோக்கில் பல வர்த்தக மற்றும் அரசாங்க தரப்புகளுடன்கலந்துரையாடவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்