இறுதி தீர்மானம் இல்லை!

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ​தொடக்கம் விமான பயண சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து திட்டமிடப்பட்டிருந்தாலும், அது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என, விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், விமான பயணச் சேவைகளை வழமைப்போன்று முன்னெடுப்பதற்காக, சுகாதாரத் துறையினரின் அனுமதி கிடைக்கப்பெறவில்லை எனவும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்