இரு தினங்களில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்!

தேர்தல் குறித்த சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் இரு தினங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பவித்ராவன்னி ஆரச்சி இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஊடக தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்