இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

பொல்பித்திகம – கனபத்தன் கங்கையில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 பேர் இவ்வாறு நீராடச் சென்றுள்ள நிலையில் அவர்கள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த இருவரும் பிரதேச மக்களினால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்டப்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் 19 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

முகநூலில் நாம்