இருட்டடிப்பு செய்யப்படுகிறாரா பாடலாசிரியர் அறிவு? பின்னணி என்ன?

கோடிக்கணக்கானவர்களால் பார்த்து ரசிக்கப்பட்ட ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலை இயற்றிய பாடலாசிரியரும் பாடகருமான அறிவு என்ற அறிவரசுவின் பெயர், பல தளங்களிலும் புறக்கணிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

BBC Tamil

பாடலாசிரியரும் பாடகருமான ‘அறிவு’ எனப்படும் அறிவரசு கலைநேசன், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் அரசு ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் எழுதிப் பாடிய பாடல்கள் மூலம் அறியப்பட்டவர்.

‘காலா’ திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான அறிவு, சுயாதீனமான பாடல்கள் மூலமும் பெரும் கவனத்தை ஈர்த்து வந்தார். பாடகி ‘தீ’ யுடன் இணைந்து இவர் உருவாக்கிய ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. YOUTBE இல் இந்த வீடியோ சுமார் 32 கோடிக்கு அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, சந்தோஷ் நாராயணன் இசையில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘நீயே ஒளி’ என்ற பாடலை சான் வின்சென்ட் து பால் என்ற பாடகருடன் இணைந்து எழுதி, பாடியிருந்தார். படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் பாடலும் ரீ – மேக் செய்யப்பட்டு YOUTBE இல் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சான் வின்சென்ட் து பால் தற்போது கனடாவில் வசித்துவருகிறார்.

இந்த இரு பாடல்களையும் மாஜா என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. சுயாதீன இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் துணையுடன் இந்த நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் உருவாக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்