இராணுவ தளபதி வெளியிட்டுள்ள விசேட செய்தி!

தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளரை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவினர் மற்றும்  இராணுவ குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி  தெரிவித்துள்ளார்.

IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற நபரக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை  ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் தொடர்பில் காவற்துறை பொதுமக்களின் உதவியினை கோரியுள்ளது.

சந்தேக நபரின் இடது கால் ஊனமுற்ற நிலையிலும், நடைபயிற்சி செய்யும் போது முடங்கிப்போயுள்ளதாகவும் காவற்துறை அடையாளப்படுத்தியுள்ளது.

திருகோணமலை – மல்லிமலர் பிரதேசத்தினை சேர்ந்த எல். சியாம் நசீம் எனப்படும் 41 வயதுடையவர் என்பதுடன்,  கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் IDH   மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபரை அடையாளம் கண்டால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு  0718591017,0718592290,0718591864 அல்லது 119 தொடர்பினை மேற்கொள்ளுமாறு காவற்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முகநூலில் நாம்