இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பலம் குறித்த கேள்விக்கு இடமில்லை என புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து குறிப்பிடுகையில்,

விவசாய சமூகத்துக்கு இலங்கை இராணுவம் தனது அதிகபட்ச ஆதரவை வழங்கும். உணவு நெருக்கடிக்கு எதிரான தனது போரின் முதல் படியாக, அரசாங்கத்தால் கைவிடப்பட்ட காணிகள் தொடர்பில் இராணுவம் விசாரணை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விவசாய சபையின் அறிவுறுத்தலின் படி, இந்த வெற்று நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்