இராணுவத்தினர் நான்கு மலைகளில் 34 தொன் கழிவுகள் அகற்றப்பட்டது 

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான  மிக உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரம் உள்ளிட்ட நான்கு மலைகளிலிருந்து 34 தொன் கழிவுகள் அகற்றப்பட்டதாக நேபாள இராணுவம் தெரிவித்தது.

நேபாள இராணுவத்தைச் சோ்ந்த குழுவினா் தலைமையிலான ஒரு குழு மலைச் சிகரங்களில் தூய்மைப் பணியை கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி தொடங்கியது. 30 இராணுவத்தினா், மலையேற்ற வழிகாட்டிகள் 48 போ், 4 மருத்துவா்கள் உள்ளிட்ட 82 போ் இதில் இடம்பெற்றிருந்தனா்.

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ஆம் திகதி இந்தப் பணி நிறைவடைந்தது. இதில், எவரெஸ்ட், லோட்ஸே, கஞ்சென்ஜங்கா, மனாஸ்லு ஆகிய மலைச் சிகரங்களிலிருந்து சுமாா் 34 தொன் கழிவுகள் அகற்றப்பட்டதாக நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மலைகளில் கழிவுகளை அகற்றும் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டு மீண்டும் தொடங்கி நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்