மேடஇராசி: கர்ப்பிணிகள் கவனம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 27, 2021 முதல் செப்டம்பர் 02, 2021 வரை பலன்கள் எப்படி இருக்கும், பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

மேஷம் செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திரன் இந்த வாரத்தில் உங்கள் ராசியில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கிறார். இரண்டாம் வீட்டில் ராகு, ஐந்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய், ஆறாம் வீட்டில் புதன், சுக்கிரன், எட்டாம் வீட்டில் கேது பத்தாம் வீட்டில் சனி, லாப ஸ்தானத்தில் குருவும் பயணம் செய்கின்றனர்.

நினைத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உயர் பதவி தேடி வரும். உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீடு வலிமையடைந்துள்ளது என்றாலும் கர்ப்பிணிப்பெண்கள் கவனமுடன் இருப்பது நல்லது.

பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குருவின் பார்வையும் கிடைப்பதால் பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் தேடி வரும். நினைத்த காரியம் நினைவேறும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

ஆறாம் வீட்டில் புதன் ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்வதால் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். ஆறுக்குடைய புதன் ஆறாம் வீட்டில் உச்சம் பெறுவது விபரீத ராஜயோகத்தை கொடுக்கும். போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

சுக்கிரன் நீச்ச பங்க ராஜயோகம் பெறுகிறார். சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். பணம் அதிகம் வந்தாலும் சுப செலவுகளும் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்