இரவு வேளை இடம்பெற்ற கோர சம்பவம்! ஸ்தலத்திலேயே பிரிந்த உயிர்!

காத்தான்குடி-03, கடற்கரை வீதி, சிறுவர் பூங்கா முன்பாக வீதியைக்கடக்க முற்பட்ட பெண் மீது முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஸ்தலத்திலேயே பெண் மரணமடைந்துள்ளார்.

நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் ஓட்டமாவடி-3, அஸ்கா பேக்கரி வீதியைச் சேர்ந்த பாத்திம்மா வயது 62 என்பவரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த பெண் தனது குடும்பத்துடன் காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு செல்லும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்துச்சம்பவத்தில் முச்சக்கர வண்டியைச் செலுத்தி வந்த வாழைச்சேனை – மாவடிச்சேனை பகுதியைச்சேர்ந்த சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முகநூலில் நாம்