இரத்தினபுரி மக்களுக்கு பல்வேறு உறுதிமொழிகளை வழங்கிய ஜனாதிபதி!

நகர அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இரத்தினபுரி நகருக்கு ஒரு புதுத் தோற்றம் கிடைக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்திற்கு நேற்று பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இரத்தினபுரி நகர மத்தியில் ஒரு முழுமையான பேருந்து நிலையமும் நிர்மாணிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கொழும்பு முதல் இரத்தினபுரியை இணைக்கும் அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் அந்த பிரதேச மக்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகநூலில் நாம்