இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) ஆகிய தினங்களில் 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் வேலையில் 1 மணி 40 நிமிடங்களும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்சாரம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாநகரப் பகுதியில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை இரண்டு மணிநேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, M, N, O, X, Y, Z வலயங்களில் காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்