இயக்குநர் ஷங்கரை பின்னுக்குத்தள்ளிய அட்லியின் சம்பளம்!

‘ராஜா ராணி’யில் சில லட்சங்களில் இருந்த அட்லியின் சம்பளம், ‘தெறி’ படத்தில் விஜய்யோடு இணைந்ததால் முதல்முறையாக கோடியைத் தொட்டது. அடுத்து மீண்டும் விஜய்யோடு ‘மெர்சல்’ படத்தில் இணைந்தார் அட்லி.

கோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்புச் செய்தி இயக்குநர் அட்லியின் சம்பளம் எவ்வளவு கோடிகள் என்பதுதான்.

இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அட்லி. பின்னர் தமிழில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிப்பில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் உருவான ‘ராஜா ராணி’ படத்தை இயக்கினார் அட்லி. படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க, இரண்டாவது படமாக விஜய்யை வைத்து பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணும் வாய்ப்பு கிடைத்தது.

‘ராஜா ராணி’யில் சில லட்சங்களில் இருந்த அட்லியின் சம்பளம், ‘தெறி’ படத்தில் விஜய்யோடு இணைந்ததால் முதல்முறையாக கோடியைத் தொட்டது. அடுத்து மீண்டும் விஜய்யோடு ‘மெர்சல்’ படத்தில் இணைந்தார் அட்லி. ஒன்றிரண்டு கோடிகளாக இருந்த அட்லியின் சம்பளம் ‘மெர்சல்’ படத்தில் 10 கோடியைத் தாண்டியது.

விஜய்யோடு ஹாட்ரிக் படமாக மீண்டும் ‘பிகில்’ படத்தை இயக்கினார் அட்லி. இதில் அட்லியின் சம்பளம் மட்டுமே 20 கோடிகளை நெருங்கியது. இந்நிலையில்தான் பாலிவுட் வாய்ப்பு அட்லிக்கு வந்தது.

‘மெர்சல்’ படத்தைப் பார்த்து அட்லிக்கு ஓகே சொன்ன ஷாருக்கானுக்கு, கிட்டத்தட்ட இதேபோன்று டபுள் ஆக்‌ஷன் படத்தை இயக்குகிறார் அட்லி. இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் இரண்டு ஆண்டுகளாக நடந்துவந்த நிலையில் ஷாருக்கான் – அட்லி படத்தின் ஷூட்டிங் இந்தாண்டு ஆகஸ்ட்டில் தொடங்கும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்துக்காக 40 கோடிவரை பேசப்பட்ட அட்லியின் சம்பளம் 35 கோடிக்கு இறுதிசெய்யப்பட்டிருக்கிறது. தமிழில் இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன் -2’ படத்துக்காக 25 கோடி ரூபாய் சம்பள ஒப்பந்தம் செய்ததே அதிகபட்சமாக இருந்தநிலையில் அட்லி குருநாதரையேத் தாண்டி 35 கோடிகளைத் தொட்டிருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்