இயக்கச்சி சம்பவத்தில் காயமடைந்தவர் பலியானார்!

கிளிநொச்சி – இயக்கச்சியில் கடந்த 3ம் திகதி இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் படுகாயமடைந்து அநுராதபுரம் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று (08) அதிகாலை உயிரழந்துள்ளார்.

தங்கராசா தேவதாஸன் (43-வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த வெடிச் சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டதுடன், சிலர் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்