இன்ஸ்டாகிராமில் விஜய்

நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை துவங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவைத் தவிர எந்த நிகழ்வுகளிலும் நடிகர் விஜய் கலந்துகொள்வதில்லை. ட்விட்டரிலும் தனது படங்களின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் பாடல்களை வெளியிடுவதோடு சரி. மற்ற நடிகர்களைப் போல ரசிகர்களிடம் கலந்துரையாடுவது இல்லை.

இந்த நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது. நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணக்கைத் துவங்கவிருக்கிறாராம். விஜய் தனது படங்களின் படப்பிடிப்புத் தள புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அதில் பகிர விருக்கிறார்.

குறிப்பாக தனது மனைவி, மகன், மகள் உள்ளிட்ட குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகர் விஜய் பகிர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் லைவிலும் ரசிகர்களுட் உரையாட வாய்ப்பிருக்கிறது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் கடந்த சில ஆண்டுகளாக மனக் கசப்பு இருந்துவருகிறது. சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரின் தனது 80 நாளை தனது மனைவி ஷோபாவுடன் கேக் வெட்டிக்கொண்டாடினார். இந்த நிகழ்வில் விஜய் கலந்துகொள்ளாதது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. ஒரு சிலர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.

வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஒரு பாடலைப் பாடியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

கோடீஸ்வரர் ஒருவர் கொல்லப்பட அவரது மகன் தந்தையைக் கொன்றவர்களை பழிவாங்குவதுதான் வாரிசு படத்தின் கதை என தகவல் பரவியது. இதனை அந்தப் படத்தின் பாடலாசிரியரும் வசனகர்ததாவுமான விவேக் மறுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்