இன்றைய ராசி பலன் 28.03.2022

மேஷம்: அசுவினி: வீண் அலைச்சல் குறையும். மனதில் நிம்மதி அதிகரிக்கும்.
பரணி: குடும்பத்தினர் உங்களிடம் ஆலோசனைகேட்டு செயலாற்றுவர்.
கார்த்திகை 1: கணவன், மனைவி இடையே கருத்து ஒற்றுமை ஏற்படும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: குழந்தைகள் தொடர்பான சந்தோஷ செய்தி உண்டு.
ரோகிணி: உங்கள் முயற்சியில் வெற்றி உண்டு. நிம்மதி ஏற்படும்.
மிருகசீரிடம் 1,2: பணியாளர்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும். செலவு கூடும்

மிதுனம் : மிருகசீரிடம், 3,4: அனைவரிடமும் நேசமுடன் பழகி அன்பை பெறுவீர்கள்.
திருவாதிரை: பேச்சில் கவனம் தேவை. எதிர்பாரத செலவுகள் உண்டாகும்.
புனர்பூசம்1,2,3: அடுத்தவர்கள் கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்.

கடகம்: புனர்பூசம்,4: பணியில் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையைத் தரும்.
பூசம்: பணவரவு சற்றுத் தள்ளிப்போவது பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
ஆயில்யம்: விருந்தினர் வருகை உண்டு. உங்களின் முயற்சி வெற்றியில் முடியும்.

சிம்மம்: மகம்: பெரிய நன்மை ஒன்றிற்காக சிறு அலைச்சல் ஏற்படலாம்.
பூரம்: தொழில், வியாபாரத்தில் சுமாரான வருமானம் கிடைக்கும்.
உத்திரம் 1: நீங்கள் வெற்றி பெறுவதற்கான புதிய வாய்ப்புகள் வரும்.

கன்னி: உத்திரம் 2,3,4: பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அஸ்தம்: வீடு, வாகன பராமரிப்பு வகையில் செலவுகள் ஏற்படும்.
சித்திரை 1,2: எதிர்பாராத உதவி கிடைப்பதால் நிம்மதி காண்பீர்கள்.

துலாம்: சித்திரை 3,4: பிறரிடம் நன்றி உணர்வை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்.
சுவாதி: உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.
விசாகம் 1,2,3: மற்றவர்களை அனுசரித்து சென்று நன்மை காண்பீர்கள்.

விருச்சிகம்: விசாகம் 4: அடுத்தவர் நலனுக்காக செலவுசெய்ய வேண்டிஇருக்கும்.
அனுஷம்: உறவினர் இடையே ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.
கேட்டை: குழந்தைகளின் அறிவுத்திறனை கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

தனுசு: மூலம்: எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் பெரிதும் பாதிப்பில்லை.
பூராடம்: எடுத்த விஷயங்களில் சற்றுத் தாமதம் ஏற்பட்ட பின்பே முடியும்.
உத்திராடம் 1: பேச்சினால் பிரச்னை வராதபடி கவனமாக இருங்கள்.

மகரம்: உத்திராடம் 2,3,4: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
திருவோணம்: எதுவும் சற்று நிதானமாக நடந்தாலும் நல்லவிதமாக முடியும்.
அவிட்டம்1,2: உதவக்கூடிய நட்பு கிடைக்கும். குழந்தைகள் மகிழ்வர்.

கும்பம்: அவிட்டம் 3,4: சவாலான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள்.
சதயம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள்.
பூரட்டாதி1,2,3: சொந்தபந்தங்கள் தேடிவந்து உங்களுடன் பேசுவார்கள். யோகமான நாள்.

மீனம்: பூரட்டாதி 4: கூடுதல் உழைப்பின் மூலம் நன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி: உழைப்பிற்கேற்ற பலன் பெற சற்றுப் பொறுமை தேவை.
ரேவதி: அனுபவ அறிவால் வெல்வீர்கள். பாராட்டு கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்