இன்றைய ராசி பலன் 27.02.2022

மேஷம்: அசுவினி: பகை விலகும் நாள். வீடு, பணி மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
பரணி: கைமாற்றாகக் கொடுத்த பணம் திரும்ப வரும். கலகலப்பான நாள்.
கார்த்திகை 1: பெற்றோரின் அன்பு மகிழ்விக்கும். வங்கி இருப்பு உயரும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வரும்.
ரோகிணி: விரைவாகச் செயல்படுவீர்கள். பெண்கள் நன்மை செய்வர்.
மிருகசீரிடம் 1,2: வேண்டிய ஒருவரிடம் இருந்து ஆறுதல் கிடைக்கும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: நெருங்கியவர்களிடம் கூட சிறு குறைகள் இருக்கும்.
திருவாதிரை: கடன் பிரச்னை தீரும். சகபணியாளரை அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் 1,2,3: சொத்து வாங்கி விற்பதில் இருந்த தடைகள் அகலும்.

கடகம்: புனர்பூசம் 4: நண்பர்களின் ஆறுதல் வார்த்தை மனதிற்கு இதமளிக்கும்.
பூசம்: குடும்பத்தினர் உங்களின் மனம் அறிந்து நடந்து கொள்வார்கள்.
ஆயில்யம்: குழந்தைகளின் மேற்படிப்பிற்கான முயற்சிகள் பலன் தரும்.

சிம்மம்: மகம்: தாயாருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.
பூரம்: பழைய கடனை பற்றி யோசித்து அதைத் தீர்ப்பீர்கள்.
உத்திரம் 1: நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும்.

கன்னி: உத்திரம் 2,3,4: தொழிலில் லாபம் அதிகரிக்கும். உற்சாகம் கூடும்.
அஸ்தம்: விருந்து மகிழ்ச்சி அளிக்கும். உழைப்பால் உயர்வீர்கள்.
சித்திரை 1,2: நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.

துலாம்: சித்திரை 3,4: குழந்தைகளால் செலவுகள் உண்டாகும். கோபம் தீரும்.
சுவாதி: பணியிடத்தில் இருந்த பிரச்னை தீரும். நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.
விசாகம் 1,2,3: குழந்தைகளால் பெருமிதம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்: விசாகம் 4: சகோதர சகோதரியால் நன்மை உண்டு. உற்சாகம் கூடும்.
அனுஷம்: வேற்று மதத்தவர் உதவுவார். குழந்தைகளால் மகிழ்ச்சி வரும்.
கேட்டை: பிறர் வியக்கும்படியான சாதனை செய்வீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும்.

தனுசு: மூலம்: விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக பாதுகாக்கவும்.
பூராடம்: இழந்த வாய்ப்புகளை பெறுவீர்கள். சுபச்செலவுகள் ஏற்படும்.
உத்திராடம் 1: வியாபாரத்தில் இருந்த தடை அகலும். நிம்மதியான நாள்.

மகரம்: உத்திராடம் 2,3,4: தேவைக்கேற்ற உதவிகள் கிடைத்து நிம்மதி அடைவீர்கள்.
திருவோணம்: குழந்தைகளின் செயல் ஒன்றால் பெருமிதம் அடைவீர்கள்.
அவிட்டம் 1,2: குழந்தைகள் நற்பெயர் எடுக்கும் நாள். தடைகள் அகலும்

கும்பம்: அவிட்டம் 3,4: காத்திருந்த விஷயம் இன்று நல்லபடியாக முடியும்.
சதயம்: உங்களிடம் தகராறு செய்தவர்கள் தானாகவே விலகுவர்.
பூரட்டாதி 1,2,3: ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். காலையில் நல்ல செய்தி வரும்.

மீனம்: பூரட்டாதி 4: செயல் ஒன்றை முனைப்புடன் செய்து முடிப்பீர்கள்.
உத்திரட்டாதி: வீடு, வாகன பராமரிப்புச் செலவுகளை மேற்கொள்வீர்கள்.
ரேவதி: வெளிநாட்டில் உள்ள உறவினர் நற்செய்தி அளிப்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்