இன்றைய ராசி பலன் 25.02.2022

மேஷம்: அசுவினி: முயற்சியில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.
பரணி: நண்பர்களிடம் அளவோடு நெருங்குவது நல்லது.
கார்த்திகை 1: விலை உயர்ந்த பரிசளித்து நட்பை நெகிழச் செய்வீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
ரோகிணி: உழைப்பின் மூலம் கூடுதல் நன்மையை காண்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: கனவு நனவாகும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் லாபம் உண்டு. மகிழ்ச்சி கூடும்.
திருவாதிரை: நண்பருடன் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும்.
புனர்பூசம் 1,2,3: பயணத்தால் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது.

கடகம்: புனர்பூசம் 4: உங்களது செயல்களால் உறவினர் இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
பூசம்: மேலதிகாரி உங்களை அழைத்து பேசும்போது அதை சரியாக பயன்படுத்துவீர்கள்.
ஆயில்யம்: புதிய துறையில் ஈடுபடுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்: மகம்: சகபணியாளர்களின் ஒத்துழைப்பால் உங்களுக்கு நன்மை ஏற்படக்கூடும்.
பூரம்: சிலரது உண்மை முகம் தெரிய வருவதால் குழப்பம் ஏற்படும்.
உத்திரம் 1: தெய்வீக எண்ணங்கள் மனதில் பெருகும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.

கன்னி: உத்திரம் 2,3,4: தொலைபேசி வழியாக வரும் செய்தி மன அமைதியை மீட்கும்.
அஸ்தம்: பணியிடத்தில் இருந்த நெருக்கடி அகலும். புதிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
சித்திரை 1,2: பணியிடத்தில் இன்று நடக்கும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தும்.

துலாம்: சித்திரை 3,4: உறவினர்களால் ஏற்பட்ட சிரமங்கள் இன்று நீங்கும்.
சுவாதி: பகைவர் மனம் மாறுவர். தாயின் அன்பை பெறுவீர்கள்.
விசாகம் 1,2,3: பிரச்னை ஒன்று தீரும். நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும்.

விருச்சிகம்: விசாகம் 4: உறவினர் விஷயத்தில் தலையிட வேண்டாம்
அனுஷம்: ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள்.
கேட்டை: வாகன வசதி அதிகரிக்கும். வியாபாரத்தில் வரவு சற்று உயரும்.

தனுசு: மூலம்: பயணத்தின்போது பொருட்களை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.
பூராடம்: புதிய முதலீடுகள் செய்வதை சில காலத்துக்குத் தவிர்க்கவும்.
உத்திராடம் 1: சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மகரம்: உத்திராடம் 2,3,4: பொருளாதார நெருக்கடி சற்றே அகலும். நட்பு வட்டம் விரியும்.
திருவோணம்: புதிய வாய்ப்புகளை பயன்படுத்த தயங்க வேண்டாம்.
அவிட்டம் 1,2: குழந்தைகளால் ஏற்பட்ட சிரமம் அவர்களாலேயே அகலும்.

கும்பம்: அவிட்டம் 3,4: மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் பேச்சில் கம்பீரம் பிறக்கும்.
சதயம்: சொந்தங்கள் உதவி வேண்டி உங்களைத் தேடி வருவர்.
பூரட்டாதி 1,2,3: கடன் பிரச்னை தீரும். மனதில் மகிழ்ச்சி நிலவும்.

மீனம்: பூரட்டாதி 4: குழம்பிய மனநிலை தெளிவாகி உங்களின் செயல்பாடு மேம்படும்.
உத்திரட்டாதி: வீண் விவாதங்களைத் தவிர்க்கப்பாருங்கள். பரிசு வாங்குவீர்கள்.
ரேவதி: உங்களின் புகழ் அதிகரிக்கும். பெரியோரின் ஆசி கிடைக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்