இன்றைய ராசி பலன் 23.04.2022

மேஷம்: அசுவினி : எடுத்த முயற்சி தாமதப்படுகிறதே என்று கவலைப்பட வேண்டாம்.
பரணி : இரவில் பயணத்தைத் தவிர்க்கவும். சுபச்செலவுகள் ஏற்படும்.
கார்த்திகை 1 : பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4 : வீடு மாற்றம் ஏற்படும். சிறு தேவை நிறைவேறும்.
ரோகிணி : உங்களின் சிறிய அலட்சியத்தால் வீண்செலவு ஏற்படலாம்.
மிருகசீரிடம் 1,2 : செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் கவனமாக இருக்கவும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : உடல் ஆரோக்கியத்தில் முழுமையான கவனம் தேவை.
திருவாதிரை : செல்வாக்கு அதிகரிக்கும். நல்ல திருப்பம் ஏற்படும்.
புனர்பூசம் : 1,2,3 : உறவினர் ஒருவரின் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4 : நீங்கள் விரும்பி எதிர்பார்த்த செயல் ஒன்று நடைபெறும்.
பூசம் : நண்பர்களுக்கு இடையே இருந்து வந்த மனவருத்தம் நீங்கும்.
ஆயில்யம் : உங்களின் கடுமையான உழைப்பு வியப்புக்குரிய பலன் தரும்

சிம்மம்: மகம் : கூடுதல் முயற்சிக்கு பிறகு பணியில் விரும்பிய மாற்றம் கிடைக்கும்.
பூரம் : உங்களின் விருப்பத்தில் சிறிய தடை ஏற்பட்டாலும் அது நிறைவேறும்.
உத்திரம் 1 : இன்று ஈடுபாட்டுடன் செயல்பட்டு நிலுவைப்பணிகளை முடிப்பீர்கள்.

கன்னி: உத்திரம் 2,3,4 : செயல்பாடுகளில் வேகம் இருக்கும். வெற்றி கை கூடும்.
அஸ்தம் : பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். பதட்டங்கள் முடிவுக்கு வரும்.
சித்திரை 1,2 : உங்களுக்கு இருந்து வந்த குழப்பம், மனஅழுத்தம் தீரும்.

துலாம்: சித்திரை 3,4 : பணியிடத்தில் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள்.
சுவாதி : நீங்கள் பேசும் வார்த்தைகளால் சிரமம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
விசாகம் 1,2,3 : குடும்பத்தின் வருமானம் பெருகும். மகிழ்ச்சி கூடும்.

விருச்சிகம்: விசாகம் 4 : பணியிடத்தில் தகுதிக்கேற்ற மேன்மை அடைவீர்கள்.
அனுஷம் : பயணத்திட்டத்தில் சந்தோஷம் அளிக்கக்கூடிய மாற்றம் உண்டு
கேட்டை : எதிர்பாராத ஒருவரின் ஒத்துழைப்பால் நன்மையும் லாபமும் கிடைக்கும்.

தனுசு: மூலம் : எந்தச்செயலிலும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டிய நாள்.
பூராடம் : பணியிடத்தில் மேலதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
உத்திராடம் 1 : புத்துணர்ச்சி பெருகும். முயற்சியால் நன்மை அடைவீர்கள்.

மகரம்: உத்திராடம் 2,3,4 : உழைப்பால் நல்ல பலன்கள் கிட்டும். பொறுமை தேவை
திருவோணம் : நவீனப் பொருட்கள் வாங்கும் முயற்சி வெற்றி தரும்.
அவிட்டம் 1,2 : மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வது நல்லது

கும்பம்: அவிட்டம் 3,4 : எந்தச்செயலிலும் தாமதம் ஏற்பட்டு பிறகு கைகூடி வரும்.
சதயம் : குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியான சூழ்நிலையும் நிலவும்.
பூரட்டாதி 1,2,3 : புதிய விஷயம் ஒன்றை கற்பீர்கள். பரபரப்பும் குறையும் நாள்.

மீனம்: பூரட்டாதி 4 : குழந்தைகளின் வாழ்வில் குதுாகலம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
ரேவதி: குடும்பத்தில் ஒருவருக்கு நல்ல செய்தி வீடு தேடி வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்