இன்றைய ராசி பலன் 23.02.2022

மேஷம்: அசுவினி: பேச்சு, செயலில் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
பரணி: பெண்கள் மூலம் இன்று நன்மை ஒன்றை எதிர்பார்க்கலாம்.
கார்த்திகை 1: எதிர்பாலினத்தினரிடம் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை கிடைக்கும்
ரோகிணி: குழந்தைகளுக்காக நீங்கள் படும்பாடு நற்பலன் அளிக்கும்.
மிருகசீரிடம் 1,2: காலையில் நல்ல செய்தி உங்களைத் தேடிவரும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: வேலை தேடுவோருக்கு நல்ல செய்தி ஒன்று கிடைக்கும்.
திருவாதிரை: நண்பர்களை சந்தித்து பழைய நினைவுகளை பேசி மகிழ்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: சிறு மாற்றம் ஒன்று நிகழும். புகழ்பெற்றவரால் நன்மை அடைவீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4: இன்று நீங்கள் எடுக்கும் விஷயம் நிச்சயம் வெற்றி பெறும்.
பூசம்: புதிய இனங்களில் முதலீடு செய்வதை ஒத்திப் போடுவது நல்லது.
ஆயில்யம்: உங்களின் கடின உழைப்பு மட்டுமே வெற்றியைத் தரும்.

சிம்மம்: மகம்: ஆன்மிக சிந்தனைகள் அதிகரிக்கும். சுறுசுறுப்பான நாள்.
பூரம்: வாழ்க்கைத்துணைக்கு அலுவலகத்தில் நன்மை ஒன்று காத்திருக்கிறது.
உத்திரம் 1: எதிர்பாராத லாபம் வரும். வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி: உத்திரம் 2,3,4: உங்களின் பிடிவாதத்தால் விரயம் ஏற்படாதபடி கவனம் தேவை.
அஸ்தம்: குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வீர்கள். பேச்சினால் நன்மை வரும்.
சித்திரை 1,2: இன்று முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனக்குழப்பம் தீரும்

துலாம்: சித்திரை 3,4: பொறுப்பும், அதிகாரமும் உள்ள பதவி உங்களைத் தேடி வரலாம்.
சுவாதி: தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். கோபம் குறையும்.
விசாகம் 1,2,3: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும்.

விருச்சிகம்: விசாகம் 4: சேமிப்பை அதிகரிப்பது நல்லது. நட்பு வட்டம் விரியும்.
அனுஷம்: பணியிடத்தில் மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
கேட்டை: பிறருக்கு உதவி செய்து அவர்களது வாழ்த்தைப் பெறுவீர்கள்.

தனுசு: மூலம்: இன்று புதிய இனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
பூராடம்: மற்றவர்களை அனுசரித்து சென்று மகிழ்ச்சி அடைவீர்கள்.
உத்திராடம் 1: புதிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம். தாயின் அன்பை பெறுவீர்கள்.

மகரம்: உத்திராடம் 2,3,4: எந்தவொரு செயல்களிலும் நேர்மையை பின்பற்றுவது நல்லது.
திருவோணம்: உறவினர் இடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்பை நீக்குவீர்கள்.
அவிட்டம் 1,2: ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். நட்பால் ஆதாயம் உண்டு.

கும்பம்: அவிட்டம் 3,4: கோயில் திருப்பணிகளில் ஈடுபடுவதால் உங்களின் புகழ் கூடும்.
சதயம்: உல்லாசப் பயணம் ஒன்றால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரட்டாதி 1,2,3: குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தோருக்கு நற்செய்தி உண்டு.

மீனம்: பூரட்டாதி 4: புதிய வழியில் பணவரவு ஏற்படும். பணிச்சுமை குறையும்.
உத்திரட்டாதி: நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்ச்சி அடைவீர்கள்.
ரேவதி: எந்தவொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்