இன்றைய ராசி பலன் 21.02.2022

மேஷம்: அசுவினி: புதிய வீடு, மனை வாங்கும் திட்டம் இன்று இனிதே நிறைவேறும்.
பரணி: குடும்பத்தில் சுபவிஷயங்கள் தீர்மானிக்கும் பேச்சு நிலவும்.
கார்த்திகை 1: குடும்பத்தினர் இடையே நெருக்கம் உண்டாகும். மகிழ்ச்சி கூடும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வாகனத்தில் புதிய மாற்றம் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
ரோகிணி: உடல் நலனில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
மிருகசீரிடம் 1,2: வாகன பயணத்தின் போது மித வேகத்தை பின்பற்றவும்

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: பணியிடத்தில் உங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும்.
திருவாதிரை: தொழில், வியாபாரம் நன்கு வளர்ச்சி பெரும்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் கை ஓங்கி இருக்க குறுக்கு வழியை நாடாதீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4: நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்
பூசம்: எதையும் வேகமாக செய்து முடிக்கும் ஆற்றல் உங்களுக்கு இருக்கும்.
ஆயில்யம்: எதிர்காலத்திற்காக பணம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.

சிம்மம்: மகம்: இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் முடிவுக்கு வரும்.
பூரம்: குடும்ப பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்
உத்திரம் 1: நிதி பிரச்னை இன்று முதல் படிப்படியாக குறைய தொடங்கும்.

கன்னி: உத்திரம் 2,3,4: கடன் வாங்குவதைத் தவிர்க்கப்பாருங்கள். அதுவே நல்லது.
அஸ்தம்: உறவினர்களுடன் சுமுகமான சூழல் இருக்கும்.
சித்திரை 1,2: குடும்ப வருமானம் சந்தோஷப்படும்படி இருக்கும்.

துலாம்: சித்திரை 3,4: இன்று ஏற்படும் வீண் செலவுகளை உங்களால் கட்டுப்படுத்த முடியும்.
சுவாதி: தாயின் உடல்நலம் மேம்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3: பணியாளர்கள் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்: விசாகம் 4: தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கலாம். மகிழ்ச்சி கூடும்.
அனுஷம்: சிலருக்கு வீண் விரயம் ஏற்படலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கேட்டை: அலுவலகத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி ஒன்று நடைபெறும்.

தனுசு: மூலம்: பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். உங்களது முயற்சி வெற்றி பெறும்
பூராடம்: புதிய முயற்சி ஒன்றில் சிறிய தடைக்குப் பின் வெற்றி கிடைக்கும்.
உத்திராடம் 1: உங்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்கலாம். குடும்ப ஒற்றுமை சிறக்கும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்பீர்கள்.
திருவோணம்: ஆரோக்கியத் தொல்லைகள் இன்று சற்றே குறையும்.
அவிட்டம் 1,2: பேச்சினால் அலுவலகத்தில் வெற்றி காண்பீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3,4: குழந்தைகளின் எதிர்காலம் குறித்த முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
சதயம்: உங்களின் சாதனை ஒன்று உங்களுக்கு பெருமை சேர்க்கும்.
பூரட்டாதி 1,2,3: உங்களது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

மீனம்: பூரட்டாதி 4: எதையும் பல முறை யோசித்துவிட்டுச் செய்வது நல்லது.
உத்திரட்டாதி: எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மையைத் தரும்
ரேவதி: பிறரது குடும்ப முன்னேற்றத்துக்கு ஆலோசனை தருவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்