இன்றைய ராசி பலன் 20.04.2022

மேஷம்: அசுவினி : எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் உங்களுக்கு மகிழ்ச்சி குறையாது.
பரணி: பேச்சில் கவனம் செலுத்தினால் பிரச்னை எதுவும் வராது.
கார்த்திகை1 : வெளியிடத்தில் அடக்கமாக நடந்து கொள்வது நல்லது.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4 : உற்சாகமாக உழைப்பீர்கள். சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
ரோகிணி : எந்தவொரு விஷயத்திலும் அவசர முடிவு எடுக்க வேண்டாம்.
மிருகசீரிடம் 1,2 : உங்களுக்கு வரவேண்டிய பணம் வீடு தேடி வரும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : உறவினர்களுக்கு உதவி செய்து மகிழும் நாள்
திருவாதிரை : தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். மன பலம் கூடும்.
புனர்பூசம் 1,2,3 : பணியிடத்தில் நீங்கள் செய்த நற்செயல்களால் பாராட்டு கிடைக்கும்.

கடகம்: புனர்பூசம் 4 : உறவினருடன் மனஸ்தாபம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பூசம் : பணிபுரியும் இடத்தில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
ஆயில்யம் : உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்களுடன் வீண்வாதம் செய்ய வேண்டாம்.

சிம்மம்: மகம் : உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
பூரம் : பணியிடத்தில் எதையும் சிந்தித்து செய்வது நல்லது.
உத்திரம் 1 : திட்டமிடாத பயணங்களைத் தள்ளிவைப்பது நன்மை தரும்.

கன்னி: உத்திரம் 2,3,4: சுப நிகழ்வுகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
அஸ்தம்: தந்தையின் ஆரோக்கியம் பற்றிய கவலை நீங்கும்.
சித்திரை 1,2: இழந்திருந்த உற்சாகத்தை இன்று மீண்டும் பெறுவீர்கள்.

துலாம்: சித்திரை 3,4 : உங்களால் தந்தைக்கு பெருமிதம் ஏற்படும். நன்மை அதிகரிக்கும்.
சுவாதி : நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்பதை கண்டு விழிப்படைவீர்கள்.
விசாகம் 1,2,3 : இன்று எதிலும் யோசித்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: விசாகம் 4 : குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.
அனுஷம் : பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக செயல்படுவீர்கள்.
கேட்டை: நீண்ட நாளுக்கு பிறகு இன்று மீண்டும் பணியிடத்தில் உற்சாகம் கூடும்.

தனுசு: மூலம் : பேச்சைக் குறைப்பது நன்மை தரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூராடம் : மதிப்பிற்குரியவர்களின் நட்பைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.
உத்திராடம்1 : பணியிடத்தில் தீவிரமான முயற்சியால் வெற்றியை எதிர்பார்க்கலாம்.

மகரம்: உத்திராடம் 2,3,4 : வாகனம் ஓட்டும்போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
திருவோணம் : அசையா சொத்துக்கள் வாங்குவதை தள்ளி வைப்பது நல்லது.
அவிட்டம்1,2 : அக்கம், பக்கத்தினரிடம் அளவாகப் பேசுவது நன்மை அளிக்கும்.

கும்பம்: அவிட்டம் 3,4 : உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்னை தீரும்.
சதயம்: கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
பூரட்டாதி 1,2,3 : குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கான ஏற்பாடு தீவிரமாகும்.

மீனம்: பூரட்டாதி 4 : பேச்சிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
உத்திரட்டாதி : பிறரிடம் குடும்ப ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
ரேவதி : குழந்தைகளுக்கு நன்மை ஏற்படும் நாள். அளந்து பேசுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்