இன்றைய ராசி பலன் 19.04.2022

மேஷம்: அசுவினி : யாரைப்பற்றியும் குறைகூற வேண்டாம். அதுவே நல்லது.
பரணி : பிறரது நலனுக்காக கூடுதல் பணி செய்வதால் பாராட்டு பெறுவீர்கள்.
கார்த்திகை 1 : கடந்த காலத்தவறுகளைத் திருத்திக் கொண்டு பயனடைவீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4 : குடும்பத்தினர் உங்களால் பெருமிதம் அடைவார்கள்.
ரோகிணி : பொறுப்புடன் பணியாற்றுவீர்கள். உறவினர் வருகையுண்டு.
மிருகசீரிடம்1,2 : பக்கத்து வீட்டாரிடம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : நண்பர்களிடம் சில பிரச்னைகளை மனம்விட்டுப் பேசுவீர்கள்.
திருவாதிரை : உறவினர், நண்பர்கள் உங்களின் வீடு தேடி வருவார்கள்.
புனர்பூசம் 1,2,3 : குடும்பத்தில் ஒருவருக்கு எதிர்பாராத நன்மை ஏற்படும்.

கடகம்: புனர்பூசம் 4 : உங்களை விட்டு பிரிந்த நண்பர்களிடம் சமாதானம் செய்வீர்கள்.
பூசம் : பொறுமையால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள்.
ஆயில்யம் : இத்தனை நாளாக சிரமாகத் தெரிந்த ஒரு செயல் இனிமேல் சுலபமாகும்.

சிம்மம்: மகம் : குடும்பத்தில் ஒருவரின் ஆரோக்கியம் மேம்படும். நிம்மதியான நாள்.
பூரம் : குழந்தைகளால் பெருமை சேரும் நாள். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
உத்திரம் 1 : பக்கத்து வீட்டாரிடமுள்ள எதிர்ப்பு அடங்கி சமாதானமாகும் நாள்.

கன்னி: உத்திரம் 2,3,4 : பணியிடத்தில் சாதுர்யமாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.
அஸ்தம் : பழைய கடனை தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
சித்திரை 1,2 : உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

துலாம்: சித்திரை 3,4 : பணியாளர்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கும். நிம்மதி கூடும்.
சுவாதி : உங்களுக்கு புது வேலைக்கான நற்செய்தி தேடி வரும். மகிழ்ச்சியான நாள்
விசாகம் 1,2,3 : பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை தீரும். மனம் லேசாகும்.

விருச்சிகம்: விசாகம் 4 : பிறருக்கு உதவி செய்து பெரியோரின் வாழ்த்தை பெறுவீர்கள்.
அனுஷம் : இன்று முதல் பண விஷயத்தில் சிக்கனத்தை கடைப்பிடிப்பீர்கள்.
கேட்டை : விடா முயற்சியால் சில செயல்களை சிறப்புடன் முடிப்பீர்கள்.

தனுசு: மூலம் : வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு.
பூராடம் : வீட்டில் செலவுகளைக் குறைப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.
உத்திராடம் 1 : கடுமையாக தொல்லை தந்தவர்கள் உங்களை விட்டு விலகும் நாள்

மகரம்: உத்திராடம் 2,3,4 : இன்று வாகன வகையில் பராமரிப்பு செலவு ஏற்படும்.
திருவோணம் : எதிர்கால திட்டம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2 : இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3,4 : சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும்.
சதயம் : இப்போது நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் நன்மையை தரும்.
பூரட்டாதி 1,2,3 : உடலிற்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிட வேண்டாம்.

மீனம்: பூரட்டாதி 4 : குழந்தைகளால் பெருமிதம் அடைவீர்கள். மகிழ்ச்சி கூடும் நாள்
உத்திரட்டாதி : அதிர்ஷ்ட வசத்தால் உங்களுக்கு நன்மை ஏற்படும் நாள்
ரேவதி: உற்சாகமாக சுபச்செலவுகளை செய்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்