இன்றைய ராசி பலன் 18.04.2022

மேஷம்: அசுவினி : விடாமுயற்சியால் வெற்றி கிடைக்கும் நாள். தன்னம்பிக்கை கூடும்.
பரணி : வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். அதிகாரியின் ஆதரவு கூடும்.
கார்த்திகை 1 : முன்பு உருவான புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4 : சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள்.
ரோகிணி : தன வரவு திருப்தி தரும். பழைய கடனை அடைப்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2 : தம்பதியரிடையே புரிதல் கூடுதலாகும். விருந்திற்கு செல்வீர்கள்

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : உடல் நிலை மேம்படுவதற்கான முயற்சியை மேற்கொள்வீர்கள்.
திருவாதிரை : இன்று சிறு உடல் உபாதைக்காக மருத்துவ சிகிச்சைக்கு செல்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3 : இளைஞர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4 : வாகன வகையில் பராமரிப்பு செலவு ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு
பூசம் : குழந்தைகள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
ஆயில்யம் : ஆரோக்கிய விஷயத்தில் இயற்கை உணவில் நாட்டம் அதிகரிக்கும்.

சிம்மம்: மகம் : வழிபாடுகளில் ஈடுபாடு ஏற்படும் நாள். நிம்மதி கூடும்.
பூரம் : நிலம் தொடர்பானவற்றில் புதிய முதலீடுகள் செய்யலாம்.
உத்திரம் 1 : புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.

கன்னி: உத்திரம் 2,3,4 : எதிர்பார்த்ததை விட பணவரவு நன்றாக இருக்கும்.
அஸ்தம் : மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வு வீட்டில் நடக்கும்.
சித்திரை1,2 : கட்டிய வீட்டைச் சீர்செய்யத் திட்டம் போடுவீர்கள்.

துலாம்: சித்திரை 3,4 : குடும்பத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள்
சுவாதி: நினைத்தது நிறைவேற தெய்வ அனுகூலம் கிடைக்கும்.
விசாகம் 1,2,3 : சக பணியாளர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும்.

விருச்சிகம்: விசாகம் 4 : பிறருக்குப் பிரதிபலன் பாராமல் உதவி செய்வீர்கள்.
அனுஷம் : வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.
கேட்டை : அலைச்சல் ஏற்பட்டாலும் நன்மை ஏற்படும் நாள்.

தனுசு: மூலம் : நண்பரின் மருத்துவ செலவிற்கு உதவி செய்வீர்கள்.
பூராடம் : வீட்டில் சுபச்செலவால் மகிழ்ச்சி ஏற்படும் நாள்.
உத்திராடம்1 : வியாபாரம் சிறக்க புது யோசனைகளை மேற்கொள்வீர்கள்.

மகரம்: உத்திராடம் 2,3,4 : உறவினர்கள் மூலம் வந்த செலவு நற்பலன் தரும்.
திருவோணம் : குடும்பத்தில் இன்று அமைதி காப்பது நல்லது.
அவிட்டம்1,2 : ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நிம்மதி ஏற்படும்.

கும்பம்: அவிட்டம், 3,4: முன்னேறுவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சதயம்: புதிய முதலீடுகள் செய்வீர்கள். முந்தைய பிரச்னை சரியாகும்.
பூரட்டாதி,1,2,3: குடும்ப விஷயத்தில் பிறர் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4 : மாணவர்களின் கல்வி திறன் மேம்படும். தந்தைக்கு நன்மை வரும்
உத்திரட்டாதி : பங்குதாரருடன் நல்லுறவு ஏற்படும். நிதான லாபம் வரும்.
ரேவதி : இன்று மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்