இன்றைய ராசி பலன் 18.01.2022

மேஷம்: அசுவினி: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
பரணி: முதலீடு சம்பந்தமான புதிய முயற்சிகளில் இன்று ஈடுபடலாம்.
கார்த்திகை 1: தந்தை வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு நன்மை நிகழும்.
ரோகிணி: பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வீண் பயம் தீரும்.
மிருகசீரிடம் 1,2: தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் செயல் திறன் கூடும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
திருவாதிரை: ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் 1,2,3: முக்கியமான முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4: குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும்.
பூசம்: சகபணியாளர்களிடம் இணக்கமாக நடந்து கொண்டு நன்மை காண்பீர்கள்.
ஆயில்யம்: வெளியூர், வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் உங்களுக்கு உதவுவர்.

சிம்மம்: மகம்: குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் நிச்சயமாகும். பணவரவு உண்டு.
பூரம்: கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த வருத்தங்கள் அகலும்.
உத்திரம் 1: வாழ்க்கைத்துணையால் நன்மை வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி: உத்திரம் 2,3,4: இன்று நிதி பற்றிய முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
அஸ்தம்: சகோதர வகையில் எதிர்பார்த்த விஷயம் தாமதமாகலாம்.
சித்திரை 1,2: குடும்பத்தினர் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள்.

துலாம்: சித்திரை 3,4: நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
சுவாதி: திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கவலைகள் தீரும்.
விசாகம் 1,2,3: வாழ்க்கைத்துணையின் செயலால் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் முன்பைவிட சற்றே அதிகரிக்கும்.
அனுஷம்: உங்களது முனைப்பான முயற்சியால் புதிய விஷயம் ஒன்று சாதகமாக முடியும்.
கேட்டை: நீண்ட நாளாக நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி இன்று வரும்.

தனுசு: மூலம்: பேச்சிலும் செயலிலும் கவனமாக இருந்தால் பிரச்னை வராது.
பூராடம்: கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும்.
உத்திராடம் 1: எதிர்பாராத செலவு வரக்கூடும். வீண் பேச்சைத் தவிர்க்கவும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: உங்களது பேச்சில் நேர்மறை எண்ணம் பிரதிபலிக்கும்.
திருவோணம்: கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. பயம் நீங்கும்.
அவிட்டம் 1,2: பணி குறித்த நல்ல செய்தி ஒன்று வந்து உங்களை மகிழ்விக்கும்.

கும்பம்: அவிட்டம் 3,4: சோம்பலைத் தவிர்ப்பது நல்லது. பழி வராமல் காக்கவும்.
சதயம்: அதிர்ஷ்டம் வரும். குழந்தைகளின் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
பூரட்டாதி 1,2,3: லாபம் கூடும். உடல்நலத்தில் கவனம் தேவை.

மீனம்: பூரட்டாதி 4: திடீர் சுபச்செலவுகளால் உங்களின் கையிருப்பு குறையக்கூடும்.
உத்திரட்டாதி: தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
ரேவதி: வாகனம் வாங்கும் யோகம் உண்டு. புதிய விஷயம் கற்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்