இன்றைய ராசி பலன் 16.01.2022

மேஷம்: அசுவினி: குடும்பத்தினர் உங்கள் மீது அதிகமாக அன்பு, பாசம் காட்டுவர்.
பரணி: தொழில் வளர்ச்சி கூடும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
கார்த்திகை 1: குடும்பத்தினர் இடையே அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: செய்ய நினைத்ததை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
ரோகிணி: நீங்கள் தீட்டிய திட்டங்கள் நிறைவு பெறும். வாழ்வு சிறக்கும்.
மிருகசீரிடம் 1,2: பல நாளாக செய்ய நினைத்த ஒரு செயலை முடிப்பீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: நேர்மறை சிந்தனைகள் காரணமாக மனம் தெளிவாகும்.
திருவாதிரை: பகை மறந்து செயல்படுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: மற்றவர்களை வென்று முன்னேறும் துணிச்சல் வரும்.

கடகம்: புனர்பூசம் 4: விரயங்கள் கூடும். விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது.
பூசம்: எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை செய்த பிறகே சரியாக வரும்.
ஆயில்யம்: ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் அமைதி உண்டு.

சிம்மம்: மகம்: தடைப்பட்டு வந்த விஷயம் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.
பூரம்: சுபச்செலவுகள் உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.
உத்திரம் 1: பயன்மிக்க புதுப்பொருள் ஒன்றை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

கன்னி: உத்திரம் 2,3,4: மறதி காரணமாக சிறு சிறு தொல்லைகளை சந்திப்பீர்கள்.
அஸ்தம்: முன்னேற்றத்துக்கான முயற்சி சற்றே தாமதமாகப் பலன் தரும்.
சித்திரை 1,2 :மன உறுதியால் நினைத்த விஷயத்தை செய்து முடிப்பீர்கள்.

துலாம்: சித்திரை 3,4: சாதுர்யமாக செயல்பட்டு அக்கம்பக்கத்தினரிடம் பாராட்டு பெறுவீர்கள்.
சுவாதி: பெரியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி அவர்களது அன்பை பெறுவீர்கள்.
விசாகம் 1,2,3: பணியிடத்தில் இருந்த தொல்லை தீரும். சுபச்செலவு உண்டு.

விருச்சிகம்: விசாகம் 4: கடந்த இரண்டு நாட்களை விட மனதில் தெளிவு கூடும்.
அனுஷம்: எதையும் நன்கு யோசித்த பிறகு செய்வது நல்லது.
கேட்டை: கவனமாக எதையும் செய்வோருக்கு நன்மை உண்டு.

தனுசு: மூலம்: மற்றவர் மனதை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.
பூராடம்: நீங்கள் நடந்து கொள்வதைப் பொருத்து தாயின் ஆதரவு இருக்கும்.
உத்திராடம் 1: உங்களின் நிதானப்போக்கால் வேலைப்பளு அதிகரிக்கும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்னை தீரும்.
திருவோணம்: குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். ஆரோக்கியம் சிறக்கும்.
அவிட்டம் 1,2: மனதில் தன்னம்பிக்கை கூடும். உடன்பிறந்தோர் உறுதுணையாக இருப்பர்.

கும்பம்: அவிட்டம் 3,4: குழந்தைகளுக்கு உங்கள் மீது பாசமும், நேசமும் அதிகரிக்கும்.
சதயம்: நீண்ட நாளைய கனவுகளை இன்று நனவாக்கிக் கொள்வீர்கள்.
பூரட்டாதி 1,2,3: நண்பர்களுக்கு உதவி செய்து அவர்களை நெகிழ வைப்பீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4: புதிய வாகனம் வாங்கும் முயற்சி இன்று நிறைவேறும்.
உத்திரட்டாதி: மேலதிகாரிகள் உங்கள் திறமைக்குத் தக்க உயர்வு தருவர்.
ரேவதி: பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சி வெற்றி தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்