இன்றைய ராசி பலன் 15.04.2022

மேஷம்: அசுவினி : நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். சுபச்செலவு செய்வீர்கள்.
பரணி : பாஸ்போர்ட், விசா தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கார்த்திகை 1 : நீண்ட நாளாக நீங்கள் எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4 : பழைய முதலீடு ஒன்று எதிர்பாராத லாபத்தை தரும்.
ரோகிணி : குழந்தைகளுக்கு பொறுப்பு வரும். மனநிம்மதி கூடும் நாள்.
மிருகசீரிடம் 1,2 : நீண்ட நாளாக விரும்பிய நல்ல செயலை இன்று செய்து மகிழ்வீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : பணியிடத்தில் இருந்த பிரச்னை தீரும். உற்சாகம் கூடும்.
திருவாதிரை : பழைய நண்பர்களின் வருகையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3 : குடும்பத்தில் குதுாகலமும், பணியிடத்தில் ஆதாயமும் உண்டு.

கடகம்: புனர்பூசம் 4 : கலைத்துறையினர் முயற்சியால் லாபம் காண்பர்.
பூசம் : வீட்டில் ஒருவருக்கு வேலை தொடர்பான நல்ல செய்தி வரும்.
ஆயில்யம் : திட்டமிட்ட செயல் சற்று காலதாமதமாக வெற்றி பெறும்.

சிம்மம்: மகம் : உங்களது முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். மகிழ்ச்சி கூடும்.
பூரம் : குழந்தைகளின் செயல்களால் பெருமிதம் அடைவீர்கள்.
உத்திரம் 1 : எதிர்பாராத நன்மை உண்டு. சொத்து விஷயத்தில் கவனம் தேவை.

கன்னி: உத்திரம் 2,3,4 : உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தினரால் பெருமிதம் ஏற்படும்.
அஸ்தம் : கடினமான செயல்களை செய்து முடிப்பீர்கள். பயம் நீங்கும்.
சித்திரை 1,2 : ஆசிரியரிடம் பாராட்டு பெறுவீர்கள். விளையாட்டில் ஆர்வம் கூடும்.

துலாம்: சித்திரை 3,4 : வியாபாரம் தொடர்பான நல்ல செய்தி வந்து சேரும்.
சுவாதி : மனதிற்கு மகிழ்ச்சி தரும் நிகழ்வு ஒன்று நடைபெறும் நாள்.
விசாகம் 1,2,3 : தேவையற்ற கவலைகளால் வருத்தப்பட வேண்டாம்.

விருச்சிகம்: விசாகம் 4 : வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும்.
அனுஷம் : புதிய இனங்களில் முதலீடு செய்வது குறித்து யோசிப்பீர்கள்.
கேட்டை : சொத்துக்களை விற்பதின் மூலம் லாபம் வரும்.

தனுசு: மூலம் : புதிய மனிதர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம்.
பூராடம் : ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதால் தொல்லை ஏற்படக்கூடும்.
உத்திராடம் 1 : உழைப்பிற்கு ஏற்ற நல்ல பலன்களை பெறுவீர்கள்.

மகரம்: உத்திராடம் 2,3,4 : தாமதமான வெற்றி கிடைத்தாலும் மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : குடும்பத்தில் சில நாட்களாக இருந்து வந்த வருத்தம் நீங்கும்.
அவிட்டம் 1,2 : மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

கும்பம்: அவிட்டம் 3,4 : பிரிந்து சென்ற நண்பருடன் நெருக்கம் உண்டாகும்.
சதயம்: மற்றவருடன் பழகுவதில் கவனம் தேவை. சகோதரர் மகிழ்வார்.
பூரட்டாதி 1,2,3 : அக்கம்பக்கத்தினரை இன்று அனுசரித்து செல்வீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4 : யாரிடமும் பகை வேண்டாம். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும்.
உத்திரட்டாதி : குழந்தைகள் வெற்றி பெறுவர். புண்ணியச் செயலை செய்வீர்கள்.
ரேவதி : பயணத்தின் மூலம் நன்மை காண்பீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்