இன்றைய ராசி பலன் 15.01.2022

மேஷம்: அசுவினி: சந்தர்ப்பங்கள் சாதகமாக அமைந்து வாழ்வில் முன்னேறுவீர்கள்.
பரணி: உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி வரும். நண்பர்களை சந்திப்பீர்கள்.
கார்த்திகை 1: மனதில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நிம்மதி நிறையும் நாள். நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள்.
ரோகிணி: கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1,2: எதிர்பாராத நபர் ஒருவர் உங்கள் மகிழ்ச்சிக்கு வழிவகுப்பார்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: நீங்கள் நினைத்துக்கூட பார்க்காத நிகழ்வு நடந்து மகிழ்விக்கும்.
திருவாதிரை: உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு உயரும்.
புனர்பூசம் 1,2,3: உங்களின் எண்ணம் நிறைவேறும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு.

கடகம்: புனர்பூசம் 4: தொழில், வியாபாரம் சிறக்கும். நண்பர்களால் நன்மை உண்டு.
பூசம்: உங்களுக்காக அன்புக்கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஆயில்யம்: தன்னம்பிக்கை கொண்டோருக்கு இன்று தக்க பலன் கிடைக்கும்.

சிம்மம்: மகம்: மேலதிகாரிகள் பரிவுடனும் கருணையுடனும் உங்களை அணுகுவர்.
பூரம்: உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற ஆரம்பிப்பதால் மனநிறைவு கூடும்.
உத்திரம் 1: உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உங்களின் உழைப்பு வீணாகாது.

கன்னி: உத்திரம் 2,3,4: நல்லவர்களுடன் நட்பு கொள்வீர்கள். மகிழ்ச்சி கூடும்.
அஸ்தம்: உங்களின் முன்னேற்றத்திற்கு தாயார் உறுதுணையாக இருப்பார்.
சித்திரை 1,2: பயந்து கொண்டிருந்த விஷயம் ஒன்று சுமுகமாக முடியும்.

துலாம்: சித்திரை 3,4: பணியாளர்கள் உழைப்பின் காரணமாக நலம் பெறுவீர்கள்.
சுவாதி: பணியிடத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் மறுபடியும் கொடுக்கப்படும்.
விசாகம் 1,2,3: நல்லவர்களின் ஆதரவு நலம் சேர்க்கும். பணிவு கூடும்.

விருச்சிகம்: விசாகம் 4: யாருடனும் கருத்து வேறுபாடின்றி இணங்கிப் போவது நல்லது.
அனுஷம்: பிறரிடம் அவசரமாகப் பேசிவிட்டு பிறகு வருத்தப்பட வேண்டாம்.
கேட்டை: குடும்பத்தினரின் நடவடிக்கையால் மகிழ்வீர்கள். அனுபவம் வெற்றி தரும்.

தனுசு: மூலம்: எதிர்பாராத நபர் ஒருவரிடமிருந்து தேவையான உதவி கிடைக்கும்.
பூராடம்: குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க முயலுங்கள்.
உத்திராடம் 1: வேலை தேடுவோருக்கு புதிய வேலை கிடைக்கக்கூடும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: குடும்பம் விரிவாகும். கற்பனைக் கவலைகள் வேண்டாம்.
திருவோணம்: கணவன் மனைவி இடையே எதிர்காலத் திட்டம் உருவாகும்.
அவிட்டம் 1,2: பொருளாதார நிலை பற்றிய கவலை தீர புதிய வழி பிறக்கும்

கும்பம்: அவிட்டம் 3,4: புகழ்மிக்க ஒருவர் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்.
சதயம்: நெருங்கிய ஒருவருடன் சந்திப்பு ஏற்பட்டு ஒற்றுமை பலப்படும்.
பூரட்டாதி 1,2,3: நீங்கள் எடுத்த முயற்சியில் திடீர் வெற்றி கிடைக்கும்

மீனம்: பூரட்டாதி 4: திறமை உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி: சொத்து, வீடு வாங்கும் எண்ணம் கைகூடும்.
ரேவதி: யோகமான நாள். நீண்ட கால ஆசை ஒன்று நிறைவேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்