இன்றைய ராசி பலன் 13.05.2022

மேஷம்: அசுவினி : புதிய நண்பர்கள் உதவியால் மாற்றம் ஏற்படும் நாள்.
பரணி : எதிர்பார்த்த வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
கார்த்திகை 1 : உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்னை விலகும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் பங்கேற்பீர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரோகிணி : நண்பரின் உதவியால் பிரச்னையிலிருந்து விடுபடுவீர்கள். நிம்மதியான நாள்.
மிருகசீரிடம் 1, 2 : பணியிடத்தில் நெளிவு,சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : அரசு வழியில் சில சிக்கல் தோன்றி மறையும். பரபரப்பான நாள்.
திருவாதிரை : நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நாள். முயற்சியில் கவனம் தேவை.
புனர்பூசம் : பிறரால் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

கடகம்: புனர்பூசம் 4 : தடைபட்டிருந்த செயலில் முயன்று வெற்றி காண்பீர்கள்.
பூசம் : தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். ஆரோக்யத்தில் கவனம் தேவை.
ஆயில்யம் : தைரியமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.

சிம்மம்: மகம் : வியாபாரத்தில் லாபம் காண வேண்டிய நாள். பேச்சில் நிதானம் தேவை.
பூரம் : எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். எதிரி உங்களை விட்டு விலகுவர்.
உத்திரம் 1 : எதிலும் யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : உங்கள் வேலைகளில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய நாள்.
அஸ்தம் : உங்களது செயலின் முடிவினை தள்ளி வைப்பது நல்லது.
சித்திரை 1, 2: பழைய பிரச்னை மீண்டும் தலைதுாக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

துலாம்: சித்திரை 3, 4 : திடீர் பயணத்தால் அதிக செலவு உண்டாகும்.
சுவாதி : மனதை அலைபாய விடுவதால் சங்கடம் தோன்றும்.
விசாகம் 1, 2, 3 : கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: விசாகம் 4 : தொட்டதெல்லாம் வெற்றியாகும் நாள். உங்கள் செல்வாக்கு உயரும்.
அனுஷம் : பிரிந்து சென்ற உறவினர் ஒருவர் உங்களைத்தேடி வருவார்.
கேட்டை : தொழிலில் லாபம் வரும் வழிகளைக் கண்டறிந்து செயல்படுவீர்கள்.

தனுசு: மூலம் : தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும் நாள்.
பூராடம் : வியாபாரத்தில் எதிர்பார்த்திருந்த வகையில் லாபம் காண்பீர்கள்.
உத்திராடம் 1 : நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : தந்தை வழியில் ஆதாயம் காண்பீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் கவனம் தேவை.
அவிட்டம் 1, 2 : அலைச்சல் அதிகரித்தாலும் அதனால் லாபம் ஏற்படும்.

கும்பம் : அவிட்டம் 3, 4 : எதிரிகளின் கை மேலோங்கும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.
சதயம் : உங்கள் வேலைகளை வேறு நபர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.
பூரட்டாதி 1, 2, 3 : உங்கள் செயல்களில் இழுபறி தோன்றும். மனஅழுத்தம் வேண்டாம்.

மீனம் : பூரட்டாதி 4 : பணியிடத்திலிருந்த இட மாறுதல், ஊர் மாறுதல் குறித்த தகவல் வரும்.
உத்திரட்டாதி : நட்புகளின் வழியே சில பிரச்னைகளுக்கு முடிவு காண்பீர்கள்.
ரேவதி : தொழில், உத்தியோகம் வகையில் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்