இன்றைய ராசி பலன் 12.05.2022

மேஷம்: அசுவினி : பண வரவு அதிகரிக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
பரணி : நம்பிக்கையுடன் நினைத்த செயலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கார்த்திகை 1 : தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்னை நீங்கும். நிம்மதி உண்டாகும்.
ரோகிணி : விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
மிருகசீரிடம் 1, 2 : புதியவர்களின் அறிமுகத்தால் லாபம் ஏற்படும். பண வரவு உண்டு.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : முக்கியமான செயல்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
திருவாதிரை : தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும்.
புனர்பூசம் : எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில்,உத்தியோகத்தில் லாபம் உண்டாகும்.

கடகம்: புனர்பூசம் 4 : ஆதாயம் அதிகரிக்கும். வீட்டிற்குரிய நவீன சாதனங்களை வாங்குவீர்கள்.
பூசம் : அரசு வகையில் லாபம் காண்பீர்கள். எதிர்கால நலன்கருதி திட்டமிடுவீர்கள்.
ஆயில்யம் : உத்தியோகத்தில் இருந்து வந்த நெருக்கடி விலகும்.

சிம்மம்: மகம் : எதிர்பார்த்த செய்தி வீடு தேடி வரும். தொழிலில் வெற்றி உண்டாகும்.
பூரம் : புதிய செயல்களுக்கு முயற்சிப்பீர்கள். பேச்சில் கவனம் தேவை.
உத்திரம் 1 : எதிர்பாராத லாபம் கிடைக்கும்.சகோதர வகையில் ஆதரவு உண்டாகும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : குழப்பங்கள் உண்டாகி திட்டமிட்டபடி செயல் முடியாமல் போகும்.
அஸ்தம் : ஒருசிலரின் செயல்பாட்டால் மனஅழுத்தம் அடைவீர்கள். கவனம் தேவை.
சித்திரை 1, 2: அமைதி காக்க வேண்டிய நாள். புதிய முயற்சி தள்ளிப்போகும்.

துலாம்: சித்திரை 3, 4 : திடீர் செலவு ஏற்படும். வாகனப்பயணத்தில் எச்சரிக்கை தேவை.
சுவாதி : அலைச்சல் அதிகரிக்கும். செலவு செய்து சில வேலைகளை முடிப்பீர்கள்.
விசாகம் 1, 2, 3 : உடல்நிலையில் கவனம் தேவை. நண்பர்கள் வழியில் சங்கடம் தோன்றி மறையும்.

விருச்சிகம்: விசாகம் 4 : தொழிலில் வெற்றி காண்பீர்கள். பண வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
அனுஷம் : உங்கள் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் யோகமான நாள்.
கேட்டை : உடல்நிலை சீராகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

தனுசு: மூலம் : நேற்றைய செயல் ஒன்று இன்று நிறைவேறும். நண்பர்கள் அறிமுகமாவார்கள்.
பூராடம் : தொழிலில் திட்டமிட்ட செயல் ஒன்று வெற்றியாகும். நிதி நிலை சீராகும்.
உத்திராடம் 1 : பிள்ளைகளின் படிப்பிற்காக சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : நேற்றுவரை இருந்த நெருக்கடியில் மீள்வீர்கள். புதிய பாதையில் பயணிப்பீர்கள்.
திருவோணம் : எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவி கிடைக்கும் நாள்.
அவிட்டம் 1, 2 : தடைபட்டிருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம்: அவிட்டம் 3, 4 : எதிர்பார்க்காத செயலில் பிரச்னை தலைதூக்கும். அமைதி தேவை.
சதயம் : பணியிடத்தில் சங்கடம் தோன்றி மறையும். நட்பு வட்டம் பெருகும்.
பூரட்டாதி 1, 2, 3 : தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம். விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள்

மீனம்: பூரட்டாதி 4 : தொழிலில் இன்று நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
உத்திரட்டாதி : வீட்டிற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். யோகமான நாள்.
ரேவதி : உங்கள் திறமை வெளிப்படும். தொழிலில் உங்கள் கை ஓங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்