இன்றைய ராசி பலன் 11.05.2022

மேஷம்: அசுவினி : எதிர்பார்த்த செயல் ஒன்று இழுபறியாக இருக்கும். யோசித்து செயல்படவும்.
பரணி : அரசு வழியிலான பணியிட முயற்சி உங்களுக்கு முன்னேற்றத்தை காண்பிக்கும் .
கார்த்திகை 1 : பிள்ளைகள் நலன் குறித்த செயலில் கவனம் செலுத்துவீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : அரசு வழியில் அதிருப்தி உண்டாகலாம், எச்சரிக்கை தேவை.
ரோகிணி : அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்யத்தில் கவனம் தேவை.
மிருகசீரிடம் 1, 2 : எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னை விலகி நிம்மதியுடன் செயல்படுவீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : உங்களது கடின உழைப்பால் வெற்றி காண்பீர்கள். யோகமான நாள்.
திருவாதிரை : தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகி நன்மை ஏற்படும்.
புனர்பூசம் : எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும் உற்சாகமான நாள்.

கடகம்: புனர்பூசம் 4 : பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் சிறு, சிறுபிரச்னை தோன்றி மறையும்.
பூசம் : உத்தியோகத்தில் நெருக்கடியை சந்திப்பீர்கள். விழிப்புணர்வு அவசியம்.
ஆயில்யம் : வியாபாரத்தில் முழுக்கவனம் செலுத்துவீர்கள், நிதி நிலை கூடும்.

சிம்மம்: மகம் : நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.
பூரம் : அரசு வழியிலான எதிர்பார்ப்பு நிறைவேறும். கடவுளுக்கு நன்றி செலுத்துவீர்கள்.
உத்திரம் 1: உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். மனநிம்மதி அடைவீர்கள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : திடீர் சுபச்செலவுகள் ஏற்படும். மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
அஸ்தம் : முயற்சி இழுபறியாகும். நினைத்த செயல் தள்ளிப்போகும் நாள்.
சித்திரை 1, 2 : புதிய செயல்களில் விரயம் உண்டாகும். யோசித்து செயல்படவும்.

துலாம்: சித்திரை 3, 4 : இன்று நினைத்த காரியங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
சுவாதி : மனம் ஒருமுகப்படும். நினைத்த செயல் நிறைவேறும்.
விசாகம் 1, 2, 3 : உங்களுக்கு வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

விருச்சிகம்: விசாகம் 4 : குடும்பத்தின் முன்னேற்றத்திற்குரிய முயற்சி இன்று பலிதமாகும்.
அனுஷம் : வேலையில் இருந்த நெருக்கடி விலகும். நிம்மதி கூடும்.
கேட்டை : சில சொத்துகள் வழியே உண்டான சிக்கல் முடிவிற்கு வரும்.

தனுசு: மூலம் : முயற்சியில் தடை, தாமதம் ஏற்பட்டு அலைச்சலை சந்திப்பீர்கள்.
பூராடம் : எதிர்பார்த்த செயல் இழுபறியாகி மனம் சோர்வடையும்.
உத்திராடம் 1 : உறவினர் ஒருவரால் நன்மை ஏற்படும். மகிழ்ச்சி காணும் நாள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் நெருக்கடி உண்டாகும்.
திருவோணம் : தேவையற்ற குழப்பங்களால் வீண் பிரச்னை உண்டாகலாம்.
அவிட்டம் 1, 2: உத்தியோகத்தில் மேலதிகரிகளால் சங்கடத்தை சந்திப்பீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4 : புதிய முயற்சி பலிதமாகும். எதிர்பார்த்தவற்றில் லாபம் உண்டாகும்.
சதயம் : தம்பதிகள் இடையே உண்டான பிரச்னை தீர்ந்து ஒற்றுமை காண்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4 : குடும்பத்தில் ஒருவருக்கு திருமணப்பேச்சு பலிதமாகும்.
உத்திரட்டாதி : பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும்.
ரேவதி : வீடு,மனை வாங்கும் முயற்சி பலிக்கும். அதிர்ஷ்டகரமான நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்